வாக்குச்சீட்டுக்களை பெறுவது தொடர்பில் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை இன்று அஞ்சல் திணைக்களத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அஞ்சல் மா அதிபர் ருவான் சத்குமார தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, வீடுகள் தோறும், அதிகாரப்பூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிப்பதற்கான சிறப்பு நாளாக ஏப்ரல் 20 ஆம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவை அதிகாரப்பூர்வ ஆவணங்கள் என்பதால், அவை கிடைத்தவுடன் கையொப்பமிடப்பட வேண்டும்.
எனவே, அவற்றை ஏற்றுக்கொண்டு கையொப்பமிட, வீடுகளில் யாராவது இருப்பதை உறுதி செய்துக்கொள்ளுமாறு அஞ்சல் மா அதிபர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை ஏப்ரல் 29 ஆம் திகதிக்குள் வழங்க முடியாத எந்தவொரு வாக்குச் சீட்டுகளையும், பெறுநர்கள் அருகிலுள்ள அஞ்சல நிலையத்திற்குச் சென்று, தங்கள் அடையாளத்தைச் சரிபார்த்து, பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.