News
இந்திய பெருங்கடலில் பதிவான நிலநடுக்கம்..!

இந்தியப் பெருங்கடலில் 6.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலின் உட்புறத்தில் அமைந்துள்ள தென்கிழக்கு இந்திய ரிட்ஜ் என்று அழைக்கப்படும் மலைத்தொடரில் காலை 7.13 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, இந்த அனர்த்தத்தை தொடர்ந்து சுனாமி ஏற்படும் எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.