News
		
	
	
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் : அதிர்ந்த வட இந்தியா

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந் நிலநடுக்கமானது இன்று (19.04.2025) சனிக்கிழமை மதியம் ஆப்கானிஸ்தான் – தஜிகிஸ்தான் எல்லை பகுதியில் ஏற்பட்டுள்ளது.
ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 5.8 ஆக பதிவானதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
130 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உணரப்பட்டது.
இதனையடுத்து பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.




