News

யாழில் மிக விரைவில் கடவுச்சீட்டு அலுவலகம்

யாழ்ப்பாணத்தில் (Jaffna) இன்னும் ஓரிரு வாரங்களில் கடவுச்சீட்டு பணிமனையை இயங்கச் செய்யும் நோக்கில் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றதாக தகவல் வெளியாகி உள்ளது.

குடிவரவு – குடியகல்வு திணைக்களத்தின் (Department of Immigration and Emigration) பிராந்திய பணிமனையை யாழ்ப்பாணத்தில் அமைக்க அமைச்சரவை அனுமதி வழங்கியது.

இதற்காக யாழ். மாவட்ட செயலகத்தில் ஒதுக்கப்பட்ட இடத்தை கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணம் வந்திருந்த அநுரகுமார திஸாநாயக்க பார்வையிட்டிருந்தார்.

இந்த நிலையில் கடவுச்சீட்டு பணிமனையை அமைக்கும் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ‘ஒருநாள் சேவைக்கான வலைத்தள சேவைக்கு’ யாழ். மாவட்டத்திலிருந்து விண்ணப்பங்கள் கிடைக்காமையால் தென்னிலங்கையில் இருந்து குறித்த சேவை வழங்குநர்கள் பெறப்படவுள்ளனர் என்று கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, தென்னிலங்கையில் இருந்து குறித்த சேவை வழங்குநர்கள் பெறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை யாழ்ப்பாணம் மாவட்ட குடிவரவு  குடியகல்வு திணைக்களத்தில் கடமையாற்ற தேவையான தமிழ் உத்தியோகத்தர்களை அரச திணைக்களங்களில் இருந்து தெரிவு செய்வதற்கான நேர்முக பரீட்சை கொழும்பில் இருந்து வருகை தந்த விசேட குழுவால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button