News

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல உதவித்தொகை திட்டத்தில் ஒரு பெரிய புதுப்பித்தலை மேற்கொள்ளவுள்ளதாக கல்வி அமைச்சு (Ministry of Education) அறிவித்துள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிதியுதவி சரியான நேரத்தில் மற்றும் திறமையாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இது மேற்கொள்ளப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தவகையில், தகுதியான மாணவர்களின் பட்டியலைப் புதுப்பித்தல் மற்றும் உதவித்தொகை செயன்முறையை நிர்வகிக்க ஒரு மையப்படுத்தப்பட்ட தரவுத்தளத்தை நிறுவுதல் ஆகியவை பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்திற்கு (UGC) பணிக்கப்பட்டுள்ளதாக கல்வி மற்றும் உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மதுர செனவிரத்ன (Madhura Senevirathna) தெரிவித்தார்.

உயர்கல்வியைத் தொடரும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு ஒரு முக்கிய நிதி ஆதரவாக இருக்கும் மஹாபொல உதவித்தொகையை வழங்குவதில் தற்போதுள்ள தாமதங்களை நீக்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என்று இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நேரடியாக மகாபொல உயர்கல்வி உதவித்தொகை அறக்கட்டளை நிதியுடன் ஒருங்கிணைந்து உதவித்தொகைகளை விநியோகிக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அமைப்பில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை மேம்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button