News
கடுமையான மின்னல் தாக்கம் : மக்களுக்கு வெளியான அவசர எச்சரிக்கை

கடுமையான மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று (26.04.2025) பிற்பகல் நாடு முழுவதும் கடுமையான மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையின்படி, நாடு முழுவதும் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாகவும், இது மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழையின் போது பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.