News

புதிய பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் நியமனம்

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே (Subhashini Indika Kumari Liyanage) பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய எச்.ஜே.எம்.சீ.ஏ.ஜயசுந்தரவின் (H.J.M.C.A. Jayasundara) சேவைக்காலம் 2025.05.06ஆம் திகதியுடன் முடிவடைந்தது.

இந்தநிலையில் குறித்த பதவிக்கு சுபாசினி இந்திக்கா குமாரி லியனகே நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் தற்போது இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் (Department of Examinations) பரீட்சைகள் ஆணையாளர் பதவியில் கடமையாற்றுகின்ற இலங்கை கல்வி நிர்வாக சேவையின் விசேடதர அதிகாரியாவார்.

வெற்றிடமான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஏ.கே.சுபாசினி இந்திக்கா குமாரி லியனகேவை நியமிப்பதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button