இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது, ஜனவரி முதல் ஏப்ரல் மாத காலப்பகுதியில் இலங்கைக்கான வெளிநாட்டு பணவனுப்பல் 18.3 சதவீதம் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் 2,460.5 மில்லியன் அமெரிக்க டொலராக வெளிநாட்டு பணவனுப்பல் பதிவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன் அதிகாரபூர்வ புள்ளி விபரங்களின் படி, ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுப் பணம் அனுப்புதல் 646.1 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தது.
எனினும்,இது கடந்த மார்ச் மாதத்தில் பதிவான 693.3 மில்லியன் அமெரிக்க டொலரை விடவும் குறைவாகும் என இலங்கை மத்திய வங்கி தரவுகள் தெரிவிக்கின்றது.
இதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ள திறைசேரி உண்டியல்கள் குறித்து இலங்கை மத்திய வங்கி அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.