Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

நாட்டை உலுக்கும் தொடர் கோர விபத்துக்கள் : அரசின் அதிரடி நடவடிக்கை

நாட்டை உலுக்கும் தொடர் கோர விபத்துக்கள் : அரசின் அதிரடி நடவடிக்கை | Government Action Regarding Accidents In Sri Lanka
நாடு முழுவதும் அதிகரித்து வரும் வீதி விபத்துகளை கட்டுப்படுத்த புதிய நடவடிக்கை ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 16 நிறுவனங்கள் கூட்டாக இணைந்து வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான செயல் திட்டம் ஒன்றை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (Ministry of Transport & Highways) தெரிவித்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) அன்று இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று, நுவரெலியா (Nuwara Eliya) – கம்பளை (Gampola) பிரதான வீதியிலிருந்து விலகி பள்ளத்தாக்கில் விழுந்து சுமார் 22 பயணிகள் உயிரிழந்ததுடன் 35 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தநிலையில், வீதி விபத்துகளைத் தடுப்பதற்கான திட்டங்கள் குறித்து ஊடகம் ஒன்றுக்குப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் டாக்டர் பிரசன்ன குணசேன (Prasanna Gunasena) கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மூன்று மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட வீதி பாதுகாப்பு என்ற முயற்சியின் ஒரு பகுதியாக ஒரு செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
இது வீதி தொடர்பான இறப்புகள் மற்றும் காயங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டது.
வீதி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பில் உள்ள அனைத்து முக்கிய பங்குதாரர்களும் இந்த திட்டத்தின் கீழ் ஒன்றிணைக்கப்படுகிறார்கள்.
இதில் வீதி பயணிகள் போக்குவரத்து ஆணையம், இலங்கை போக்குவரத்து சபை, தொடருந்து துறை, காவல்துறை, மோட்டார் போக்குவரத்துத் துறை, தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனம் மற்றும் பல அடங்கும்.
அவர்கள் ஒரு செயல் திட்டத்தைத் தயாரித்துள்ள நிலையில் அது அடுத்த இரண்டு மாதங்களுக்குள் செயல்படுத்தப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button