புதிய உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவதில் சிக்கல்!

உள்ளூராட்சி நிறுவனங்களை நிறுவதில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல அரசியல் கட்சிகளில் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்கள் மற்றும் நெருக்கடிகளினால் உறுப்பினர் பட்டியலை சமர்ப்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தாமதத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்களுக்கும் உறுப்பினர்களின் பெயர்களை ஒரு வாரத்திற்குள் அனுப்புமாறு தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்பட வேண்டிய உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை இந்தப் பெயர்கள் அனைத்தும் கிடைத்த பின்னரே வெளியிட முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு கூறியுள்ளது.
இதேவேளை, 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரப்பூர்வ பதவிக்காலம் 2025 ஜூன் 02 ஆம் திகதி ஆரம்பமாவதாக ஆணைக்குழு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.