ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றம் தொடர்பில் வெளியான தகவல்

ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டுக்கான குடியேற்றம் 2023 ஆம் ஆண்டைவிட ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக பிரித்தானியாவின் (United Kingdom) தேசிய புள்ளிவிவர பணியகம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய நாடுகளில் குடியேற்றம் மற்றும் குடியேறிகள் தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தும் பிரதான அரசியல் அரங்கில் கொதிநிலையாக தொடர்ந்தவன்னம் உள்ளது.
குடியேற்றவிதிகளின் இறுக்கம் காரணமாக வேலைவாய்ப்புகள் மற்றும் கல்விசார்ந்த நோக்கத்துடன் பிரித்தானியாவுக்குள் வருபவர்களின் எண்ணிக்கையும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் எண்ணிக்கையும் குறைவடைந்துள்ளதாகவும் நேற்று (22.05.2025) வெளியிடப்பட்ட தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய தரவுகளில் கடந்த ஆண்டு 948,000 பேர் பிரித்தானியாவுக்குள் குடிபெயர்ந்த அதே நேரத்தில் 517,000 பேர் நாட்டைவிட்டு வெளியேறியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர் நுழைவிசைவு (விசா) விதிகளில் புதிய இறுக்கமான விதிகள் அறிவிக்கபட்டுஎதிர்வரும் நான்கு ஆண்டுகளில் குடியேற்றத்தை கட்டுப்படுத்துவதாக பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் உறுதியளித்திருந்த நிலையில் இந்த புதிய புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.
கடல்வழியாக சட்டவிரோதமாக வந்து பிரித்தானியாவில் புகலிடம் தேடுபவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்தபோது இருந்ததை நிலைமையை விட விட அதிகமாக இருந்தாலும் அரச நிதியில் புகலிடம் தேடுவோருக்கு விடுதிகள் வழங்கப்படும் சந்தர்ப்பங்கள் குறைந்துள்ளதாகவும் இந்த தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அண்மையில் பிரித்தானிய அரசாங்கத்தின் அறிவித்த குடியேற்றத்தை குறைக்கும் திட்டங்களில், வெளிநாட்டிலிருந்து பராமரிப்புப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதைத் தடை செய்வது திறமையான தொழிற்துறை விசாக்களுக்கான விதிகளை இறுக்கமாக்குவது.
வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுக்கு அதிகரித்த செலவை ஏற்படுத்துவது.
அனைத்துவகையான வேலை விசாக்களுக்கும் ஆங்கில மொழித் தேர்வை கட்டாயமாக்குவது குடியேற்றவாசிகள் குடியேறிய நிலைக்கு விண்ணப்பிப்பதற்கு பிரித்தானியாவில் வாழ வேண்டிய நேரத்தை தற்போதைய ஐந்து ஆண்டு என்ற நிலையில் இருந்து 10 ஆண்டுகளாக உயர்த்துவது உட்பபட்ட விதிகள் அறிவிக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.