Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

சிறிலங்கன் எயார்லைன்ஸ் களமிறக்கும் புதிய விமானம்

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் தனது விமானம் சேவையில் புதிய எயார்பஸ் A330-200 விமானத்தை சேர்க்கவுள்ளது.

இதன்படி, குறித்த விமானத்தை ஜூன் 4 ஆம் திகதி இணைப்பதன் மூலம் சிறிலங்கன் எயார்லைன்ஸ் அதன் நீண்ட தூர விமானத் திறன்களை மேம்படுத்த உள்ளது.

4R-ALT ஆகப் பதிவு செய்யப்படவுள்ள இந்த விமானம், இரண்டு ரோல்ஸ் ராய்ஸ் ட்ரென்ட் 772B-60 எஞ்சின்களால் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இந்த புதிய விமானம், விமான நிறுவனத்தின் அகலப்பகுதி செயல்பாடுகளை வலுப்படுத்தும் மற்றும் சர்வதேச இணைப்பை விரிவுபடுத்துவதற்கான அதன் உத்தியை ஆதரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை, சிறிலங்கள் எாயர்லைன்ஸ் தனது விமானப் படையை நவீனமயமாக்குவதற்கும் நீண்ட தூர வழித்தடங்களில் சேவை வழங்கல்களை மேம்படுத்துவதற்கும் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு பகுதியாகும்.

இதேவேளை, விமானம் சேவையில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே வணிக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button