அதிரடியாக வீழ்ச்சி கண்ட டொலர் மதிப்பு!

2025 ஆம் ஆண்டு நிலவரத்தின்படி யூரோவிற்கு எதிரான அமெரிக்க (America) டொலரின் மதிப்பு 13 சதவீதமாக குறைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்தோடு, ஜப்பானிய யென்னுக்கு எதிரான அமெரிக்க டொலரின் மதிப்பு எட்டு சதவீதமாக குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பதவிக்கு வரும் போது, உலகின் முன்னணி நாணயமாக அமெரிக்க டொலரை மேலும் ஒருங்கிணைப்பது அவரது குறிக்கோளாக இருந்தது.
இருப்பினும், அவரின் பொருளாதாரக் கொள்கைகளே தற்போது அமெரிக்க டொலர் பலவீனமடைய காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ட்ரம்பின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் அதிக வரி விதிப்புகளால் உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை ஏற்பட்டது.
இந்த நீடித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக முதலீட்டாளர்கள் டொலர் சொத்துக்களிலிருந்து விலகிச் செல்லும் போக்கு ஏற்பட்டது.
இதேவேளை, ஐரோப்பா மற்றும் ஜப்பானிலும் அதிக பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இது போன்ற காரணங்களே டொலரின் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.