வரி இன்றி பொருட்களை ஏற்றுமதி – இலங்கைக்கான பிரித்தானியாவின் மகிழ்ச்சி செய்தி

பிரித்தானிய (UK) அரசாங்கம் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத்தை மேம்படுத்து முகமாக புதிய வர்த்தக சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த உள்ளது.
இன்று (ஜூலை 10) வெளியிடப்பட்ட புதிய வர்த்தக நடவடிக்கைகளின் தொகுப்பால் நுகர்வோர் மற்றும் வணிகங்கள் பயனடைய உள்ளனர்.
இலங்கை, நைஜீரியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் பல பொருட்களை தீர்வை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய சந்திப்பம் அளிக்கப்படும்.
ஆடைகள், உணவுப் பொருட்கள், மின்னணுவியல் சாதனங்கள் போன்றவை இந்தச் சலுகையின் கீழ் வரும் பொருட்களின் பட்டியலில் அடங்கும்.
இதன் மூலம் இலங்கையின் ஆடைகள் பிரித்தானியாவினுள் வரியின்றி நுழைய அனுமதிக்கிறது என்று அந்நாட்டு வணிகம் மற்றும் வர்த்தகத் துறை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் ஊடாக அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள், ஏற்றுமதி வர்த்தகத்தில் முன்னேற்றம் மற்றும் நாட்டின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது
அவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தக யோசனை, இந்த புதிய முறைமைக்கான புதுப்பிப்பின் ஒரு பகுதியாக, பிரித்தானிய வணிகங்கள் மற்றும் நுகர்வோர் அதிக போட்டி விலையில் இறக்குமதிகளிலிருந்து பயனடைய முடியும் என்று பிரித்தானிய வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, இலங்கையின் உற்பத்தி பொருட்களுக்கு 30% வீத தீர்வை வரியை அறவிடவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதியின் கையொப்பத்துடன் வெள்ளை மாளிகையால் அனுப்பப்பட்ட கடிதத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் இலங்கையிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்துவிதமான பொருட்களுக்கும் 30 வீத தீர்வை வரி அறிவிடப்படவுள்ளது.
பாரிய பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு அமெரிக்க ஜனாதிபதியின் வரி விதிப்பானது பாரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறான சூழ்நிலையில் பிருத்தானியாவின் இந்த அறிவிப்பானது இலங்கை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.