News
இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

இலங்கைக்கு வெளிநாட்டில் இருந்து அனுப்பப்படும் பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (CBSL) விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, வெளிநாட்டு பணியாளர்களால் கடந்த ஜூன் மாதத்தில் இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணத்தின் ஊடாக 635.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது 2024 ஆம் ஆண்டு ஜூனில் பெறப்பட்ட 519.6 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது, 22 சதவீத அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன.
எனினும், 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் கிடைத்த 641.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது, அனுப்பப்பட்ட தொகையானது சற்று குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கையில் உள்ள வணிக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் மதிப்பு சற்று உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.