News
அரசியலமைப்பு பேரவையில் மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டம்

அரசியலமைப்பு பேரவை மற்றும் சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான நியமனங்களில் கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த அரசியலமைப்பு அமைப்புகளின் செயறபாடுகளை நிறைவேற்றுவதில் நடைமுறை சிக்கல்கள் இருப்பதாக அரசாங்கம் கருதுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தேவைகளுக்கு ஏற்ப அரசியலமைப்பு திருத்தங்களை கொண்டு வர அரசாங்கம் முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது
அரசாங்கம் திறமையாகச் செயல்பட விரும்புகின்றபோதும், தற்போதுள்ள சில ஆணைக்குழுக்களுடன் திறமையாகச் செயல்படுவது கடினமாக உள்ளது என்று அரசாங்கத்தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.