News

7500 ரூபாயாக அதிகரிக்கப்படும் உதவித்தொகை – மகிழ்ச்சி செய்தி

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 5000 ரூபாவில் இருந்து 7500 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது.

அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய கொள்கை மற்றும் செயல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

அரசாங்க தகவல்கள் திணைக்களத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுகத் வசந்த டி சில்வா (Sugath Wasantha de Silva) இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 8.7 சதவீதமான பேர் மாற்றுத்திறனாளிகள், அவர்கள் இல்லாமல் ஒரு வளமான நாட்டை உருவாக்க முடியாது.

அந்தவகையில், அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, மாற்றுத்திறனாளிகளின் மேம்பாட்டிற்காக பல திட்டங்கள் செயற்படுத்தப்படவுள்ளதாக என நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு கட்டுவதற்கு வழங்கப்படும் நிதி உதவியை அதிகரித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கான காப்பீட்டு முறையை அறிமுகப்படுத்தல் போன்ற திட்டங்களையும் எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகத் வசந்த டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button