News
வலுவிழக்கும் இலங்கை ரூபாவின் பெறுமதி! தொடர் வீழ்ச்சி பதிவு.

கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாவின் பெறுமதியானது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த ஆண்டு ஜூலை மாதம் 25ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதியானது 3.1 சதவீதம் வீழ்ச்சியடைந்திருந்தது.
கடந்த வார இறுதியில், இது 3 சதவீதமாக பதிவாகியிருந்த நிலையில், ஜூன் மாத இறுதி வாரத்தில் இந்த வீழ்ச்சி 2.5 சதவீதமாக பதிவாகியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.