News
கொழும்பில் பல்மாடி வாகனத் தரிப்பிடம் அமைக்க தீர்மானம்
கொழும்பு நகரின் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில் பல்மாடி வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைக்க நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானித்துள்ளது.
கொழும்பின் வாகன நெரிசலைத் தவிர்க்கும் வகையில் தற்போதைக்கு புதிதாக இருபது இடங்களில் வாகனத் தரிப்பிடங்களை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அத்துடன் இன்னும் சில இடங்களில் வாகனத் தரிப்பிடம் அமைப்பதற்கான சாத்தியம் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
குறித்த இடங்களிலும் விரைவில் வாகனத் தரிப்பிடங்களை ஏற்படுத்த நகர அபிவிருத்தி அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக கொழும்பில் பல்மாடி வாகனத் தரிப்பிடம் ஒன்றை அமைப்பதற்கும் நகர அபிவிருத்தி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளதுடன், அது தொடர்பான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.