News

48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கும் தொடருந்து சாரதிகள்

48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் குதிக்கும் தொடருந்து சாரதிகள் | Train Drivers On 48 Hour Symbolic Strike

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, தொடருந்து சாரதிகள் இன்று (29.07.2025) நள்ளிரவு முதல் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் சந்தன வியந்துவ, இந்த வேலைநிறுத்தம் ஜூலை 30 மற்றும் 31 ஆகிய தினங்களில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

நிர்வாகப் பிரச்சினைகள், பணி நிலைமைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் உள்கட்டமைப்பு பற்றாக்குறை ஆகியவற்றிற்கு நிரந்தர தீர்வு கோரி இந்த வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடருந்து சாரதிகள், தங்களது பிரச்சினைகள் குறித்து பல தடவைகள் அதிகாரிகளிடம் முறையிட்ட போதிலும், இதுவரை திருப்திகரமான தீர்வு எதுவும் வழங்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்று (28.07.2025) தொடருந்து பொது மேலாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலிலும், ஏற்றுக்கொள்ளத்தக்க தீர்வு எட்டப்படவில்லை என சந்தன வியந்துவ தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button