News

பிரித்தானியாவில் நடைமுறையான புதிய சட்டம்: கிளம்பியுள்ள எதிர்ப்பு!

பிரித்தானிய அரசு கடந்த ஜூலை 25ஆம் திகிதி முதல் புதிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துள்ளது.

இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம், குழந்தைகள் இணையத்தில் சந்திக்கக்கூடிய ஆபத்தான உள்ளடக்கங்களைத் தடுப்பதாகும்.

குறிப்பாக, போர்னோகிராபி, தற்கொலை மற்றும் சுயக்காயம் தொடர்பான விடயங்களை அவர்களிடமிருந்து தவிர்க்கச் செய்யும் வகையில், இணைய தளங்கள் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஆனால் இந்தச் சட்டம் வெளியாகிய பிறகு, சமூக ஊடகத் தளமான எக்ஸ் (X) (Twitter) கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

“இந்தச் சட்டத்தின் நோக்கம் பாராட்டத்தக்கதுதான். ஆனால், இது எவ்வளவு பரந்த அளவிலான கட்டுப்பாடுகளை விதிக்கிறது என்பது கவலையளிக்கிறது.

இப்படி ஒருபுறமாக, கையாளப்படும் சட்டம் சுதந்திரக் கருத்துக்களை அழிக்கக்கூடும்.” என அது தெரிவித்துள்ளது.

எலான் மஸ்கிற்கு சொந்தமான இந்த தளம், “இது ஒரு சுரண்டல்மிக்க அணுகுமுறை” என்றும், சுதந்திரத்தை தணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது போல் தெரிகிறது” என்றும் குற்றஞ்சாட்டியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள பிரித்தானிய அரசு, இது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என உறுதியாக மறுத்து விளக்கமளித்துள்ளது.

“இந்தச் சட்டம் சுதந்திரக் கருத்துக்களையும் பாதுகாப்பதற்காகவே சில விரிவான விதிகளை வகுத்துள்ளது.குழந்தைகளுக்கு மிகுந்த ஆபத்து விளைவிக்கக்கூடிய உள்ளடக்கங்கள் — போர், போர்னோ, தற்கொலை போன்றவை — மட்டுமே கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

அனைத்தையும் தடுக்கும் வகையில் சட்டம் அமையவில்லை. மேலும், தளங்களுக்கு இந்த சட்டத்திற்கு தயாராக பல மாதங்கள் முன்பே நேரம் கொடுக்கப்பட்டது.” என தெரிவித்துள்ளது.

அத்தோடு, இந்தச் சட்டத்தைக் கடைப்பிடிக்க தவறும் இணைய தளங்களுக்கு கடுமையான அபராதமும் விதிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button