News
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவின் வரி தொடர்பில் வெளியான தகவல்
இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் விதிக்கப்பட்ட இறக்குமதி வரியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக குறைத்துள்ளார்.
இந்த வரி குறைப்புக்கு அமைய இலங்கைக்கு 20 சதவீத சுங்க வரி மற்றும் 10 சதவீத அடிப்படை வரி அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, இலங்கையை பாதிக்கும் மொத்த வரி விகிதம் 30 சதவீதமாகும்.
இந்தியா மீது 25 சதவீதம், கம்போடியா மற்றும் பாகிஸ்தான் மீது 19 சதவீதம், வியட்நாம் மற்றும் தாய்லாந்து மீது 20 சதவீதம் மற்றும் மியான்மர் மீது 4 0சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ஆண்டுதோறும் அமெரிக்காவிற்கு சுமார் 1,900 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்புள்ள ஆடைகளை ஏற்றுமதி செய்கிறது.
முன்னதாக அமெரிக்காவுக்கான ஆடை ஏற்றுமதிகளுக்கு 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது.