News
விவசாயிகளுக்கு அரசாங்கம் வெளியிட்ட மகிழ்ச்சியான செய்தி!

விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படவுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று (5) உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காப்புறுதி செய்துள்ள விவசாயிகளுக்கு மட்டுமே நஷ்ட ஈடு வழங்கப்படும் எனவும் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது சிறுபோக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் நெல்லுக்கான உரிய விலை நிர்ணயிக்கப்படவில்லை எனவும் விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர்.
இந்தநிலையில், விவசாயிகளுக்கு உரிய தீர்வு வழங்கப்படும் எனவும் அதற்காக கால அவகாசம் தருமாறும் விவசாய அமைச்சர் கே.டி லால் காந்த (K. D. Lalkantha) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.