ஜனாதிபதி நிதிய உதவித்தொகை மோசடி: அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை

ஜனாதிபதி நிதியிலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை பெற்ற அரசியல்வாதிகளின் குழந்தைகள் மற்றும் உறவினர்களிடமிருந்து பணத்தை உடனடியாக அறவிட அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக சிவப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உதவித்தொகை பெற்றவர்களின் பட்டியலை சட்டத் துறை தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகிறது.
மேலும் பணத்தை மீட்டெடுப்பது தொடர்பாக சட்ட ஆலோசனையும் பெறப்பட்டுள்ளது.
ஜனாதிபதி நிதியிலிருந்து வெளிநாட்டு உதவித்தொகை பெறுவது தொடர்புடைய சட்டத்தின் விதிகளின்படி சட்டவிரோதமானது, என்று சட்டத் துறை சுட்டிக்காட்டுகிறது.
இந்தத் தகவலை வெளிப்படுத்திய நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீட்டுவசதி அமைச்சர் அனுர கருணாதிலக்க, முன்னாள் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்களின் குழந்தைகள் உட்பட 72 க்கும் மேற்பட்டோருக்கு ரூ. 200 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வெளிநாட்டு உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்
இந்த நபர்களில் பெரும்பாலானோர் முன்னாள் அரசியல்வாதிகளின் உறவினர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.