News
சிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இலங்கை குழாம்

சிம்பாப்வே அணிக்கெதிரான ஒருநாள் தொடருக்கான சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியின் பெயர் பட்டியலை, ஸ்ரீலங்கா கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
ஶ்ரீ லங்கா கிரிக்கெட் இன்று (21) விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சரித் அசலங்க தலைமையிலான குறித்த அணியானது நாளைய தினம்(22) சிம்பாப்வேக்கு செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சரித் அசலங்க தலைமையிலான இலங்கை குழாமில் பெத்தும் நிஸ்ஸங்க, நிஷாம் மதுசங்க, குஷல் மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, நுவன் பெர்ணான்டோ, கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, துனித் வெல்லாலகே,மிலான் ரத்நாயக்க,மஹேஸ் தீக்ஸன, ஜெப்ரி வென்டர்ஸே, அசித்த பெர்ணான்டோ, துஷ்மந்த சமீர, டில்சான் மதுசங்க ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.