விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான தகவல்!
அனைத்து பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளின் விலைகளை குறைப்பதற்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, அனைத்து களைக்கொல்லிகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் விலையை 20 வீதத்தால் குறைப்பதற்கும், குறிப்பிட்ட சில பூச்சிக்கொல்லிகளின் விலையில் 40 சதவீதம் வரை சலுகைகளை வழங்குவதற்கும் நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளின் விலைகளை குறைப்பதற்கு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவின் பரிந்துரையின் பேரில் விவசாய அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலில் இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.
உலக சந்தையில் பூச்சிக்கொல்லி மற்றும் களைக்கொல்லிகளின் விலை குறைப்பு, டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்தமை மற்றும் இறக்குமதித் தேவைகளுக்காக அரசாங்கம் டொலர்களை விடுவித்தமையினால் விலைகளை குறைக்க முடியும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.