News
		
	
	
இலங்கைக்கு கிடைத்த பெருந்தொகை டொலர்கள்..!

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் நாட்டுக்கு அனுப்பும் பணம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கைக்கமைய, இந்த விடயம் வெளியாகியுள்ளது.
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதற்கமைய, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் தொகை 1,413.2 மில்லியன் டொலர்கள் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




