வெளிநாட்டு நாணயங்களில் வருமானம் – அறிமுகமாகும் புதிய நடைமுறை..!
டொலர் தொடர்பில் நடைமுறையில் இருந்த சட்டமொன்றை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவருகிறது.
இலங்கை மத்திய வங்கி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ஏற்றுமதியாளர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களால் ஈட்டப்படும் டொலர்களை ரூபாவாக மாற்ற வேண்டும் என நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த சட்டத்தையே இம்மாத தொடக்கத்தில் இருந்து இடைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, வெளிநாட்டு நாணயங்களில் வருமானம் ஈட்டுபவர்கள் தமது வருமானத்தை வெளிநாட்டு நாணயத்திலேயே வங்கிக் கணக்குகளில் பராமரிக்க முடியும் என கூறப்படுகிறது.
வெளிநாட்டு பணம் அனுப்பல்கள், ஏற்றுமதி வருமானம் மற்றும் சுற்றுலா வருமானம் அதிகரிக்கும் போக்கு உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.