இலங்கைக்கு நம்பிக்கை கொடுத்துள்ள உலக வங்கி – கிடைக்கவுள்ள உதவிகள்
அமெரிக்கா சென்றுள்ள இலங்கைத் தூதுக்குழுவினர் உலக வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் எனா பேஜர்ட்டையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இதன்போது பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தல், சமுகப் பாதுகாப்பை விரைவுபடுத்தல் உள்ளிட்ட வேலைத்திட்டங்களுக்கு இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் உலக வங்கி உறுதிப்படுத்தியது.
அத்துடன் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி கிறிஷ்ணமூர்த்தி சுப்ரமணியனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இந்த சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன உள்ளிட்ட குழுவினர் பங்கேற்றனர்.
இதேவேளை, சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு தனது ஒத்துழைப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வொஷிங்டனில் நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவாவை சந்திதபோது இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.