13ஆம் திருத்தம் நடைமுறையாக்கல்: அரசு நடவடிக்கை!
மூன்று கட்டங்கள் ஊடாக தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்ப அமைச்சரவை உப குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்றிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“நாடாளுமன்றத்தில் ஏனைய கட்சிகளின் ஆதரவுடன் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இணக்கப்பாட்டுக்கு வருவதே குழுவின் முதற்கட்ட நடவடிக்கை.
தொடர்ந்து அனைத்துத் தரப்பினருடனும் கலந்தாலோசித்து பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சர்வதேச தரத்துக்கு ஏற்ப கொண்டுவருவது இரண்டாவது நடவடிக்கை.
இதேநேரம் பொறுப்புக்கூறல் நடவடிக்கைக்காக உண்மையைக் கண்டறியும் உள்ளகப் பொறிமுறையை நிறுவுவது உபகுழுவின் மூன்றாவது நடவடிக்கை.
இன நல்லிணக்கச் செயற்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கி, நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்கி அதனூடாக அபிவிருத்தி அடைவதே ஜனாதிபதியின் நோக்கம்” – என்றார்.