News
		
	
	
அடுத்த மின் கட்டண திருத்தத்திற்கு அமைச்சரவை அனுமதி!

சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், கட்டண திருத்தத்தின் மூலம் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதை அரசாங்கம் இலக்காகக் கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.
வருடத்திற்கு இரண்டு தடவைகள் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மின் கட்டணத்தை மாற்ற முடியும்.
ஜூலை மாத நிலவரத்தின் அடிப்படையில் அடுத்த கட்டணத் திருத்தம் தீர்மானிக்கப்படும்.
பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மின் கட்டணத்தை குறைத்து சலுகையை வழங்க முடியுமா என்பது குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.




