News

“க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வேண்டாம்: அனைவருக்கும் உயர்தரம்”

க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை இந்த வருடம் நடத்தாமல், அனைத்து மாணவர்களும் உயர்தரப் பரீட்சையைத் தொடர்வதற்குத் தகுதியானவர்கள் என்று அறிவிக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,

க.பொ.த. உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களைத் திருத்துவதில் தற்போது ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சாதாரணதரத்துக்குத் தோற்றவுள்ள 6 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் உயர்தரத்துக்கு முன்னேறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அத்துடன், இந்த வருடம் பரீட்சையை நடத்துவது தொடர்பில் பரிசீலிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றேன்.

"க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை வேண்டாம்: அனைவருக்கும் உயர்தரம்" | Gce Ol Examination 2023 Higher Education For All

இந்த வருடம் க.பொ.த.சாதாரணதரப் பரீட்சையை நடத்தாமல் அனைத்து மாணவர்களையும் உயர்தரத்தைத் தொடர்வதற்குத் தகுதியுடையவர்கள் என்று அறிவித்தால் அது நல்லதொரு திட்டமாக அமையும்.

கொவிட் காலத்தில் பிரிட்டனில் இவ்வாறானதொரு முடிவு எடுக்கப்பட்டது. அதனால் மாணவர்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. மாறாக மாணவர்களுக்குச் சலுகைகளே கிடைத்தன – என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button