அனர்த்த அபாய நிலைமைகளை அறிவிப்பதற்கு நவீன தொழில்நுட்ப முறை!
எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்த அபாய நிலைமைகளை முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பதற்கு நவீன தொழில்நுட்ப மற்றும் விஞ்ஞான முறையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதனை, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்றையதினம் காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டபோதே அதன் பணிப்பாளர் நாயகம் சுதந்த ரணசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அண்மைய நிலநடுக்கங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
இதேவேளை, நாட்டில் அண்மைய நாட்களில் நிலவும் கடுமையான வெப்பம் தொடர்பிலும், உரிய சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 2 மணிக்குப் பின்னர், நாட்டின் பல பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இடியுடன் கூடிய மழை மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ள உரிய பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறு அவர் மேலும் கூறியுள்ளார்.