News

கோட்டாபய ராஜபக்சவுக்கு அரசு செலவழிக்கும் பெருந்தொகை பணம்!

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு மாதாந்தம் 13 லட்சத்து 29 ஆயிரத்து 387 ரூபாய் செலவிடப்படுகின்றது. முன்னாள் அதிபர் என்ற வகையில் இந்த செலவு செய்யப்படுவதாக அதிபர் செயலகம் தெரிவித்துள்ளது.

தகவல் அறியும் சட்டத்திற்கு அமைவாக இலங்கை செய்தித்தாள்கள் நடத்திய விசாரணைக்கு அதிபர் அலுவலகம் இந்தத் தகவலைக் கூறியுள்ளது.

செய்தி நிறுவனத்தால் அதிபர் செயலகத்திடம் முன்வைக்கப்பட்ட தகவல் கோரிக்கைக்கு அமைய, அதிபர் அலுவலகத்தின் தகவல் அதிகாரி, அதிபரின் சிரேஷ்ட உதவிச் செயலாளரின் கையொப்பத்துடன் அதற்கு பதில் வழங்கியுள்ளார்.

குறித்த தகவலுக்கு அமைய, முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவின் டிசம்பர் மாதத்திற்கான செலவுகளை தகவல் அதிகாரி வெளியிட்டுள்ளார்.

அதன்படி, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு மற்றும் செயலாளருக்கான கொடுப்பனவு மற்றும் தொலைபேசி கட்டணம் போன்றவைக்காக 9,91,000 ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மின்சாரம், தண்ணீர் மற்றும் ஏனைய செலவுகளுக்கு 3,38,387.60 ரூபாய் செலவிட்டுள்ளது.

கோட்டாபாய ராஜபக்ச தற்போது பயன்படுத்துகின்ற வாகனங்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு FactSeeker கோரிக்கை விடுந்திருந்தநிலையில், அதற்கு பதிலளித்த அதிபர் செயலகம், தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும் எனக் கூறியுள்ளது.

இதேவேளை, ஓய்வூதியம், எரிபொருள் கொடுப்பனவு, தொலைபேசி, மின்சாரம், நீர் மற்றும் இதர கொடுப்பனவுகளை தனித்தனியாக வழங்க முடியாது எனவும், இந்த செலவுகள் முன்னாள் அதிபரின் ஏனைய தொடர் செலவுகளை உள்ளடக்கிய செலவின அறிக்கையில் ஒரே செலவினத்தின் கீழ் பதியப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button