ரணிலின் பதவி நீக்க நகர்வுக்கு இந்தியா அமெரிக்கா அழுத்தம்..!
அரகலய போராட்டத்தில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவை வெளியேற்ற அமெரிக்கா துணை புரிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
மேலும் அக்காலத்தில் பிரதமர் பதவி வகித்த ரணில் விக்கிரமசிங்கவை பதவியில் இருந்து நீக்குமாறு இந்தியாவும் அமெரிக்காவும் அழுத்தம் விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
” நைன் தி ஹைடென்ஸ்(nine the hidden)” எனும் தலைப்பில் எழுதப்பட்ட நூலிலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
கோட்டாவின் பதவி விலகல் அறிவிப்பு மற்றும் ரணிலின் பதவி நீக்கல் நகர்வு ஆகியவற்றிற்கு அமெரிக்கா பெரும் அழுத்தத்தை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அரகலய போராட்டம் உச்சம் பெற்ற நிலையில் மாலைதீவுக்கு கோட்டாபய தப்பி ஓடிய போது, அவருக்கு 2 கடிதங்கள் அனுப்பப்பட்டதாகவும் அதில் ஒன்றில் அவர் பதவி விலகுவதற்காகவும் மற்றொன்று ரணிலை பதவியில் இருந்து நீக்குவதற்க்காகவும் அனுப்பப்பட்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.