News
பதில் நிதியமைச்சர் நியமனம்!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உத்தியோகபூர்வ வெளிநாட்டு விஜயத்தின் போது நிதியமைச்சரின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நியமனம் தொடர்பான நற்சான்றிதழ்கள் ஜனாதிபதியினால் (கடந்த 3ஆம் திகதி) இராஜாங்க அமைச்சருக்கு உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டது.
அரசியலமைப்பின் 50வது பிரிவின்படி ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜனாதிபதியின் வெளிநாட்டு விஜயத்தின் பின்னர் நாடு திரும்பும் வரை, 04-05-2023 முதல் இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக செயற்படுவார்.