News
ஜப்பானில் அதி பயங்கர நிலநடுக்கம்..!
ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இலங்கை நேரப்படி இன்று மதியம் 2:42 மணிக்கு, (ஜப்பானின் உள்ளூர் நேரப்படி0542 GMT)10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் காரணமாக நாகானோ மற்றும் கனாசாவா (Nagano and Kanazawa) இடையே தொடருந்து சேவைகள் நிறுத்தப்பட்டன.