இலங்கைக்கு வரவுள்ள வெளிநாட்டு மருத்துவர்கள்
வெளிநாட்டு மருத்துவர்கள் இலங்கையில் பணியாற்றும் வகையில் எதிர்காலத்தில் சட்டம் இயற்றப்படும் என அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் வெளிநாடு செல்வதனால் நாட்டின் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை தொடர்பில் வார இதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
“நாட்டிற்கு நீண்டகாலமாக தேவைப்படும் மருத்துவர்களை உருவாக்க அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்கள் தொடங்கப்பட வேண்டும். அதனால் தான் இலங்கை மருத்துவர்கள் பயிற்சிக்காக வெளிநாடு சென்றுள்ளனர். அந்த நாடுகளின் குடியுரிமை பெற்று அந்த நாடுகளில் வாழலாம். ஆனால் முறையான அனுமதி பெறாமல் எந்தவொரு வெளிநாட்டு மருத்துவருக்கும் இலங்கையில் மருத்துவ சேவை வழங்க முடியாது.
நம் நாட்டில் பணிபுரிய வந்து இந்நாட்டில் குடியேறும் மருத்துவர்களும் தொழில் வல்லுனர்களும் அதிக அளவில் உள்ளனர். உலகச் சூழலை எதிர்கொள்ளும் வகையில் வெளிநாடுகளில் இருந்து மருத்துவர்களை குறிப்பிட்ட நேரத்தில் வரவழைக்க முடியும். ஆனால் அதற்கான குறிப்பிட்ட முறை எதுவும் இல்லை.
இதற்கான குறிப்பிட்ட வழிமுறைகளை அரசாங்கம் தயாரித்த பின்னர், வெளிநாட்டில் இருக்கும் எமது மருத்துவர்கள் போன்று வெளிநாட்டு மருத்துவர்கள் இலங்கையில் குடியேற வரத் தொடங்குவார்கள்.
இந்த நாட்டில் தனியார் மருத்துவக் கல்லூரியை ஆரம்பிப்பதற்கும் அதனை ஒழுங்குபடுத்துவதற்கும் தகுதியானவர்களுக்கு வாய்ப்பு வழங்குவதற்கு அரசாங்கம் மிகத் தெளிவாகத் தீர்மானித்துள்ளது. எதிர்காலத்தில் இந்த நாட்டில் பல தனியார் மருத்துவக் கல்லூரிகள் வரப் போகின்றன என்றார்.