கட்டுநாயக்காவில் சிக்கிய 170 பெண்கள்
இந்த வருடத்தின் முதல் மூன்று மாதங்களில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க விமான நிலையத்தில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு கடத்தலினால் பாதிக்கப்பட்ட 170 பெண்கள் மற்றும் கடத்தல்காரர்கள் குழுவொன்று இனங்காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
மேலும் 8 பெண்கள் தொடர்பில் விமான நிலையத்தில் உள்ள குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு வேலைகளுக்குத் தகுதியற்றவர்களை பல்வேறு மோசடி முறைகளைப் பயன்படுத்தி வெளிநாட்டு வேலைக்கு அனுப்பியதாக பல தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆள் கடத்தலைத் தடுக்கும் வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறையை கடுமையான கட்டுப்பாட்டின் கீழ் வைத்து சட்டபூர்வமாக இயக்கும் நோக்கில் இந்தப் புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அதிக திறன் வாய்ந்த பணியாளர்களை வெளிநாட்டிற்கு அனுப்ப எதிர்பார்க்கப்படுவதாகவும் அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது.
இதன்மூலம் வெளிநாடு செல்லும் தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.