ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் பங்குகள் தொடர்பில் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக அடுத்த சில மாதங்களில் விண்ணப்பங்கள் கோரப்படும் என்று அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரிச்சர்ட் நட்டால் தெரிவித்துள்ளார்.
தேர்ந்தெடுக்கப்பட்ட பொது நிறுவனங்கள் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் ஸ்ரீலங்கன் விமான சேவையும் மறுசீரமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாங்கம் தெரிவித்தது.
இதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் பெரும்பான்மையான பங்குகளை வாங்குவதற்கு இந்தியாவின் டாடா குழுமம் ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸை வாங்குவதற்கு டாடா குழுமம் ஆர்வமாக இருப்பதாக வெளியான செய்திகள் குறித்து கருத்து தெரிவித்த ரிச்சர்ட் நட்டல்,
இலங்கையின் இருப்பிடம் மற்றும் இந்தியாவிற்கு விமான சேவைகளை இயக்கும் விமானங்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, இது உண்மையில் ஒரு மூலோபாய ரீதியாக சாதகமான ஒப்பந்தமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய விமான சேவையை தனியார் மயமாக்க நான்கு வருடங்கள் எடுத்த போதிலும், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இந்த மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தை ஒரு வருடத்திற்குள் முடிக்க இலக்கு வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.