சுற்றுலா பயணிகளால் கொட்டுகிறது வருமானம்
இந்த வருடத்தின் (2023) முதல் நான்கு மாதங்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மூலம் அரசின் வருமானம் 17.8 சதவீதம் அதிகரித்து 696.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டின் (2022) முதல் நான்கு மாதங்களில் மொத்த சுற்றுலா வருமானம் 591 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த நான்கு மாதங்களில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 26.7 வீதத்தால் அதிகரித்துள்ளது.
இதன்படி, கடந்த வருடம் (2022) முதல் நான்கு மாதங்களில் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 348,314 ஆக இருந்த நிலையில் இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் (2023) 441,177 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வந்த 62,980 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு (2023) ஏப்ரல் மாதத்தில் 105,498 ஆக கணிசமாக அதிகரித்துள்ளது.