இலங்கையில் பெரும் ஆபத்தாக மாறும் நோய்!
டெங்கு வைரஸ் தொற்றின் மூன்றாம் திரிபு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
டெங்கு வைரஸ் தொற்றின் மூன்றாம் திரிபு (DENV-3) பரவுகை அதிகளவில் இடம்பெற்று வருவதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் நல நிபுணத்துவ மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் டெங்கு இரண்டாம் திரிபு பரவியதாகவும் தற்பொழுது புதிய மூன்றாம் திரிபு பரவி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
டெங்கு வைரஸ் மனிதருக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய ஒன்று என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் பலருக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதில்லை. மிதமான டெங்கு காய்ச்சலினால் மரணம் சம்பவிக்கும் சாத்தியங்கள் உண்டு என தெரிவித்துள்ளார்.
மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் இரத்த பரிசோதனை செய்ய வேண்டுமெனவும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.