நாட்டின் சீரற்ற வானிலையால் வெள்ள அபாய எச்சரிக்கை..!
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் ஜிங் கங்கையைச் சுற்றியுள்ள தாழ்நிலப் பகுதிகள் கணிசமான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசனத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
பத்தேகம, நயாகம, நெலுவ, தவலம மற்றும் நாகொட ஆகிய பிரதேச செயலகங்களுக்கு உட்பட்ட கிங் கங்கை பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகள் அடுத்த 03 மணித்தியாலங்கள் முதல் 24 மணித்தியாலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவ்விடயத்தில் மிகவும் அவதானமாக இருக்குமாறும், அந்தந்தப் பிரதேசங்களில் வசிப்பவர்கள் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் வாகன சாரதிகளையும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜிங் கங்கைக்கு மேலதிகமாக, நில்வலா ஆற்றை சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொட்டாபொல, பிடபெத்தர, அக்குரஸ்ஸ, அத்துரலிய, மாலிம்பட, திஹாகொட, மாத்தறை, தெவிநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு உட்பட்ட தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.