தளர்வடையவுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகள்..!
இறக்குமதித் தடைகளை தளர்த்துவதற்கான திட்டத்தை ஜூன் மாதத்திற்குள் முன்வைக்க, நாட்டின் இரண்டாவது பெரிய வர்த்தக பங்காளியான ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை உறுதியளித்துள்ளது.
2020இல் நடைமுறைக்கு வந்த கட்டுப்பாடுகள், வேகமாக குறைந்து வந்த அந்நியச் செலாவணி கையிருப்பைத் தக்கவைக்கும் நடவடிக்கையாக, இலங்கை, இறக்குமதிகளை கட்டுப்படுத்தியது.
இந்தநிலையில், அண்மையில் நடைபெற்ற இலங்கை – ஐரோப்பிய ஒன்றிய கூட்டு ஆணைக்குழுவின் 25வது அமர்வின் போது, தற்போதைய பொருளாதார நிலைமைகளை காரணியாகக் கொண்டு, இறக்குமதி கட்டுப்பாடுகளில் இருந்து படிப்படியாக வெளியேறுவதற்கான தமது விருப்பத்தை இலங்கை வெளிப்படுத்தியது.
முன்னதாக இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்ததில் இருந்து, குறித்த வர்த்தக கொள்கைகளில் இருந்து விலகுமாறு இலங்கையை ஐரோப்பிய ஒன்றியம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தமையும் குறிப்பிடத்தக்கது.