News

இலங்கையில் திடீரென உயர்ந்த கோவிட் மரணங்கள் – ஒரே நாளில் அதிகபட்ச உயிரிழப்பு

இலங்கையில் இந்த ஆண்டு ஒரே நாளில் கோவிட் நோயாளிகள் மற்றும் இறப்புகளின் அதிகபட்ச தினசரி எண்ணிக்கை சனிக்கிழமை பதிவாகியுள்ளது.

அதற்கமைய அன்னைறய தினம் 15 கோவிட் தொற்றாளர்கள் மற்றும் மூன்று மரணங்கள் பதிவாகியுள்ளன.

தொற்றுநோயியல் பிரிவின் தினசரி நிலைமை அறிக்கைக்கமைய, புதிய நோயாளிகளின் எண்ணிக்கை 61 ஆகவும், மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 672,357 ஆகவும் உள்ளது.

மேலும் புதிய இறப்புகளுக்குடன் சேர்த்து மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 16,864 ஆக உயர்த்தியது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவலுக்கமைய, தொற்றுநோய் தொடங்கியதில் இருந்து பதிவான வழக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் 231 நாடுகளில் 80வது இடத்தில் இலங்கை உள்ளது.

தற்போதைய நிலைமை தொடர்பில் பதிலளித்த மூத்த சுகாதார அதிகாரி, கோவிட் நிலைமை ஆபத்தானது அல்ல, மக்கள் பீதி அடைய வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

புதிய தொற்றாளர்கள் அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதால் நாங்கள் நிலைமையை கண்காணித்து வருகிறோம்.

எனினும் வெற்றிகரமான தடுப்பூசி திட்டத்தின் மூலம் கோவிட் வைரஸுன் பாரிய அலைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button