தங்க நகை வியாபாரம் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!
வங்கிகள் மற்றும் அடகு வைக்கும் நிலையங்களில் தங்க நகைகளை அடகு வைக்கும் போது அதற்காக பயன்படுத்தும் அளவை இயந்திரங்களில் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அண்மைய காலமாக அளவை இயந்திரங்கள் தொடர்பில் பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் பணிப்பாளர் ஏ.ஐ.எஸ். பண்டார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
தற்போது பாவனையில் உள்ள இயந்திரங்களின் ஊடாக போலி தங்கங்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் அளவை திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைமையை தவிர்ப்பதற்கு பயிற்சிபெற்ற அதிகாரிகளை நிதி மற்றும் வங்கி நிறுவனங்களில் இணைத்துக் கொள்ள வேண்டும்.
தங்க நகைகளை அடகு வைப்பதற்கு முன்னர் அதிகாரசபையின் ஊடாக பரிசோதனை அறிக்கையை பெற்றுக் கொள்ள முடியும்.” என தெரிவித்துள்ளார்.