பிறப்புச் சான்றிதழில் ஏற்படவுள்ள மாற்றம் – நடைமுறையாகவுள்ள புதிய திட்டம்..!
டிஜிட்டல் பிறப்புச் சான்றிதழை மிக விரைவில் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் திரு.அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ்கள் இல்லாதவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நடமாடும் சேவையில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே இராஜாங்க அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிவிக்கையில், உள்நாட்டலுவல்கள் அமைச்சு மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம், “புதிய கிராமம்-புதிய நாடு”(அலுத் கமக்-அலுத் ரடக்) தேசிய வேலைத்திட்டத்துடன் இணைந்து, பிறப்பு, இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்கள் இல்லாதவர்கள் தொடர்பான சான்றிதழ்களை வழங்குவதற்கான நடமாடும் சேவையை அனைத்து பிரதேச செயலகங்களிலும் செயல்படுத்தி வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், தொழில்நுட்ப அமைச்சுடன் இணைந்து இவ்வேலைத்திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார்.