வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவித்தல்!
அடுத்த 24 மணிநேரத்திற்கான நாட்டின் வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் சில நாட்களில் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நாடு முழுவதும் ஆரம்பமாகும் என வளிமண்டலவியல் திணைக்கள அறிக்கையில் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.வரை பலத்த மழையும் பெய்யக்கூடும்.
ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
நாடு முழுவதும் அவ்வப்போது வீசும் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு சுமார் 40-45 கி.மீ வரை காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.