Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

விமான சேவைகள் ஊடாக பெருந்தொகை வருமானத்தை ஈட்டிய இலங்கை

இலங்கையின் கட்டுநாயக்க மற்றும் மத்தள உட்பட அனைத்து விமான நிலையங்களையும் நிர்வகிக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் கடந்த வருடம் 27,647 மில்லியன் ரூபாவை மொத்த இலாபமாக ஈட்டியுள்ளது.

வரி செலுத்திய பின்னர் அதன் இலாபம் 4,803 மில்லியன் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில், விமான நிலையம் மற்றும் விமான போக்குவரத்து நிறுவனம் 1,983 மில்லியன் ரூபாவை அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளதாக அதன் வருடாந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மறுசீரமைப்பு எங்களைப் பாதிக்காது. அது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸைப் பாதிக்கலாம் ஆனால் அது விமான நிலையத்தையும் விமான சேவையையும் பாதிக்காது.

அதற்குக் காரணம் நாங்கள் அரசுக்கு சொந்தமான இலாபம் ஈட்டும் நிறுவனம். எங்கள் கடந்த ஆண்டு லாபம் 6.5 பில்லியன் ரூபாய். இந்த ஆண்டு எங்கள் இலக்கு 21.5 பில்லியன் ரூபாய் இலாபம். அதை எங்களால் ஈட்ட முடியும்” என விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button