ஏற்றுமதி வருவாய் வீழ்ச்சி – பாதிப்பிற்குள்ளாகும் ஆடை உற்பத்தி!
வருடத்தின் முதல் 04 மாதங்களில், சரக்கு ஏற்றுமதி வருமானம் 379 மில்லியன் டொலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், ஆடை ஏற்றுமதி வருமானம் கிட்டத்தட்ட 310 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.
மே 31ஆம் திகதி இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட வெளிநாட்டுத் துறையின் செயற்பாடு குறித்த அறிவிப்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
சரக்குகளின் ஏற்றுமதி 2022 ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4,225 மில்லியன் டொலரை ஈட்டியிருந்த நிலையில், இவ்வாண்டு 3,846 மில்லியனாக டொலராக குறைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வறிவிப்பில் தெரியவந்த தகவலின்படி, சுற்றுலாத்துறையின் வருமானமும், நாட்டுக்கு அனுப்பப்படும் வெளிநாட்டு ஊழியர்களின் வருமானமும் அதிகரித்துள்ளது.
ஆனால் சீனாவிடம் இருந்து பெறப்பட்ட யுவான் பணமும் அழிந்த போதிலும் அந்நாட்டின் அதிகாரப்பூர்வ வெளிநாட்டு கையிருப்பு மிகக் குறைந்த அளவே அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.